உ திருப்பழநியங்கிரி பவழ மாலை விநாயகர் காப்பு வேழமுண்ட என்ற திருப்புகழ் சூழ வரும் வினையோடு சுமையான இப்பிறவியும் பேழ யறும் பழநிமலை பவழமாலையைப் பாட வேழமுக விநாயக! வேண்டிய ஞானமதை ஆழமொடு அடியேற்கருளுக குறைவிலாமலே! முருகன் அருளால் விதியை வென்று நற்கதி அடைய அணிப்பட்டணுகி என்ற திருப்புகழ் கதியைப் பெருவதற்கருளை உன்கடை விழியாற் காட்டி விதியை வெல வேண்டிய வழியைச் சொல வருகவே! நதியைச் செஞ்சடையிற்சூடி நகைத்தவர் மைந்தா உலகில் அதியற்புத சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 1 முருகன் நற்றாளை பற்றிட அகல்வினை என்ற திருப்புகழ் நற்றாளை பற்றுவதும் நாயேனுக்கரிய பொருளோ? குற்றாலத் துறையுங் குமரா! கோழிகோடி யழகா! கற்றார்க் கெளியவா! கனிவாயிற் பகர்வாய் ஓர் சொல் போற்றா ளொளிற் சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 2 முருகன் அருளால் வழிபாடு பயனுற்று பதிஞானம் பெற அருத்தி வாழ்வொடு என்ற திரு...