Posts

Showing posts with the label Lingam 81-100

அமிர்தகடேச்சுரர் Amirthagadesurar

Image
எழுசினமோர் காலால் காலனை அடி காரணனை உழவாரஞ் சுமந்து அடிச்சுவடே வைகயெ னழுத வாகீசர்க்கமிர்த மானானைத் தொழ மிகுஆயுளொடு ஆரோக்கியம் அருளிடுவானே !

ஆதிஅருணாசலேச்சுரர் Adiarunachalesurar

Image
பூணாதது ஓர் அரவு பூணும் ஆதியரனை காணாத தோர் விசுவமுமானானைச் சொல்லாலே பேச நாணாது ஒளிரும் ஞானமொடு அறிவு கல்வி ஊணாதி பொருளானவை உகந்து ஆட் கொள்ளுவானே!

வித்யாதரேச்சுரர் Vidyadharesurar

Image
சித்துகளோர் பார்வையால் காட்டுமரனே எத்திசையுஞ் சுடராய் பளிச்சிடு சுரேசனே இத்தரணிதனில் யாவுமாயுறைவானேயுனை பத்தியுடன் தொழ கல்வி வித்தை போதிப்பாயே!

திருவராகேச்சுரர் Thiruvaragesurar

Image
பருவுலகோர் பாயாய் சுருட்டிய அரக்கனை பொருதிச் சுவற செய்தச் சீஅரிகேசன் திருராமன் தொழுத வராகேச்சுரனை சிவ உருத்திரனை மானிடமேந்தியை வணங்கிடுக!

திருமச்சேச்சுரர் Thirumachesurar

Image
கருமுதலோர் காடேகும் வரை பகலிரவென வரு நாளில் சுகிப்பீரே அச்சிவனைசேர ஒருமச்சவுருவில் மறைகொணர மாயனுக் கருள் செய்தானை கண்டநுதினந்துதிப்பீர் !

திருசித்தீச்சுரர் Thirusidisurar

Image
கருத்திலோர் ஆனந்த நடமிடுமரனை திருமுறைகள் சுரப்பானை உச்சி செந்தீயனை குருத்துவனை யோக சித்தியொடு அகத்தி லிருத்தி தொழுதுவர சித்திகள் அளிப்பானே!

நரசிங்கேச்சுரர் Narasingesurar

Image
தரணியிலோர் தனித்தன்மையான பிரம புரவேந்தர் சுத்த தமிழைச் சொலக் கேட்டு இரங்கி வந்தானை சிவாகமச் சொரூபனை நரசிங்கேச்சுரனை தொழ நற்பலன் கூடுமே !

திருஇலகுளீச்சுரர் Thiruilagulesurar

Image
உலகுக்கோர் ஒளியாஞ் சிவமொடு சேர சொலவொணா ஞானச் சுருதியானை உச்சியுளீ சுகுணனை நலமிகு கொடுப்பானை இமகிரியானை பலருங்காண நவமணி விற்றானை தினம் பாடுக !

திருபணாமணீச்சுரர் Thirupanamanesurar

Image
குணாளனை ஓர் குருவாய் வரு பராபரனை மணாளனை தேன் சுரப்பாரை மெச்சி பணீயுமவனை பணாமணீச்சுரனைப் பவனநாதனை விணாரும் வியக்கும் விமலனை துதித்துய்வீர் !

திரிகாலஞானேச்சுரர் Thrikalangyanesurar

Image
ஏதமிகு ஓர் வாழ்விலுழல்வீரே! அரனான பாதகேசாதி சுழுமுனையோகச் சீலனே பாஞான நாதலயம் அருள்வான் கான் நம்பியை ஆதரித்தேற்றானே உமக்குங் கதியளிப்பான்!

வன்மீகநாதேச்சுரர் Vanmeganathesurar

Image
தேன்சொறியோர் சுவையான பாடலை வாயாரப்பாடி வான்புகு சுந்தரனை மெச்சிய தேனை நாறு மூன்களைந்துய்யவே பாமீது படிந்தானை நான்முகனின் சிரங் கொய்தானை வணங்குவீர் !

முப்புராரீச்சுரர் Mupuraresurar

Image
அப்பனை யோர் ஆதியை அஞ்சுமான அரனை சிப்பியிலொரு சுடர்மணியைச் சொற்சீரீயு மப்புராணனை சேரும் புருவ நடுகண்ணால் முப்புரமெரித்தானை தொழ முன்வினை அகலுமே !

புண்ணியகோட்டீச்சுரர் Puniyakoteesurar

Image
கூவுகுயிலோர் குரலழகு பெறக்காரணனை தாவு மானொடு சுடலையி லொருச்சித்தாடீ காட்டி கோவுண்ட யறுகமுதா யணியு மெங் கோனை நாவுண்ட சொல்லிருப்பானை புகழ நன்மையே!

திருசுரகேச்சுரர் Thirusuragesurar

Image
ஒருவனா யோர் உருவமிலாதானாய் வரமது தருவானை பசுவேறுந் தவச்செந்தீகேசனை திருரச நீற்றால் சுரநோய் தீர்ப்பானை பருப்பதத்தானை நீர்துதித்து பலனடைக !

பிரளயநாதேச்சுரர் Bralayanathesurar

Image
புயபலமோர் ஆணவமாக் கொண்ட அரக்கன் நயமொடு சுருதிபாட மெச்சிய தேவநாதனை அயமேறி அடியாரினுளமாட் கொண்டு துயரனைத்துந் தீர்த்தானை தொழ பிறவியறுமே !

சந்திரமௌளீச்சுரர் Chandramowlesurar

Image
ஓதாமல் ஓர் சிவநாமம் உருகி தரணியில் பாதாரச் சுழிப் பற்றாச் சூருளீர் மௌன ஆதார பார்வையாலார்த்திடுவானை லய நாதானந்தச் சொரூபனை நாடி தொழுது சரணடைவீர்!

சிவாத்தானேச்சுரர் Sivathanesurar

Image
உவாயுரி போர்த்து விடையேறிடும் வீரனே! துவாதசபுய சுதனை பெற்றச் சேகரனேச் சிவாத் தாணுமாலயனேத் திரிசூலியே என்று அவாவுடன் கூறிட வருஞ் சிதைவு அகலிடுமே!

மணிகண்டீச்சுரர் Manikandesurar

Image
பிணியற வோர் பிறப்பிறப்பிலா வரமுற பணியணி பசுபதியானை மெச்சி அண்டீர் அணி கொண்ட திருமுறைகளிலகலாதுள்ளானே மணி கண்டனே எனக்கூறி மங்காது வாழ்வீர்!

காரைத்திருநாதேச்சுரர் Karaithirunathesurar

Image
நூலிலுறையோர் நுட் பொருளானானை நுகரவே சூலிலிருந்து சுழல்வானை இச்சையான தேனை நாலிரு நற்பதியிலுறை வீரத்திருரூபனை மேலிரைக்கும் நீரானை காரைக் காடானை தொழுவீர் !

திருபிரகதீச்சுரர் Thirubragathesurar

Image
நுகர்வ தோர் ஞானமருளுஞ் சங்கரனை சிகரமானது சுவற செய்தச் செந்தீ முகனை நகர முதலான யகர பிந்துரூபனை பகருமெவர்க்கும் பகரொணா நிதி அருளுவான் !