Posts

Showing posts with the label Lingam 61-80

வழக்கறுத்தீச்சுரர் Vazakaruthesurar

Image
சிறுவனினோர் வழக்கறுத்தானை வரமணி உறுகண் பொசுங்சி குலையச்சிவத்தீயைத் தறு கணற் கயிரோன் பாற்க்காய்ந்தானை எறுழுதுடையோன் தாதையை தொழ வழக்குமறுமே !

திருகாவதேச்சுரர் Thirukavathesurar

Image
எரு தேறி யோர் கையி லோடுந் தாங்கி இரந்தானை கருவாக சுக்கில முளேச் சாரூப தேனாகி திருவடி பதியுங் காவ தேச்சுரனை தொழ வரும் வறுமையுந் தீர்ந்தினிதாய் வாழ்வீர் !

திருமுத்தீச்சுரர் Thirumukthisurar

Image
தேடிவரு மோர் தீராப் பிணியாவுந் தீரவே கோடி பிரகாச சுடரானை சிவச்சாரத் தீயை ஈடிலாத் தொண்டருய முத்தீ வழி ஈவானை காடிருந்தாடுவானை கோயிற் பதியானை கும்பிடுக !

திருமேற்றளீநாதேச்சுரர் Thirumetralisurar

Image
வேருற்ற தோர் பயனை வழங்கும் பரனை காருற்ற நீரை சுழல வைத்துச் சீருளீயறனை பாருற்ற உயிர்க்கும் மேன்மை புரிவானை சீருற்ற கழலானைத் தொழுதேத்தி சிவமாவீர்!

திருஓங்காரேச்சுரர் Thiruongaresurar

Image
மலரு மலர் பறித்து மலரடி பரவ வலரவர் மாசு நீங்கிட மெச்சுவரே! போகாத மலங்களை போக்கிடும் ஓங்காரணர் புலருமுனரே அவரைப் போற்றி பதிஞானமடைக !

அமரநாதேச்சுரர் Amaranathesurar

Image
நமசிவாயர் நாரி பாகனான நாகாபரணர் தம மிலாத சுடரான சிவச் சொரூப தேவர் இம நாயகர் மகர மடக்கியவரான அமர நாதர் இவரை தொழ அருளைப் பெறலாமே !

திருஅக்னீச்சுரர் Thiruagnisurar

Image
சேவுருவொடோர் சூலமுந் தாங்கிய பரமன் பூவுருவில் சுகந்தமானச் சாம்பனீயு மாவுருக்குள்ளேயும் அமுதானான் அவனை நாவுருக்கொண்டேத்தி தான்யாதி செல்வமடைவீர் !

திருஆதிநாதேச்சுரர் Thiruadinathesurar

Image
உருவமுமோர் நான்காய் உறை ஓங்காரனை பருவங்களை சுற்றினானை பேச்சில்தேனை நாத சுருதியில் இருப்பானை ஆதிநாதனை சிவ கிருபை தருவானை கருதிதொழ விதியறுப்பீர்!

திருக்கேதாரீச்சுரர் Thirukedharesurar

Image
இருவினையோர் நோக்கிலறுப்பானை அரனை பெரும் ஆத்ம சுத்தத் தவச்சீலரீவதான ஒரு கேழ் உடையானை திருக்கேதாரனை சொற் பொருளானை பணிந்தேத்த நற்கதியை பெறலாமே !

திரியம்பகேச்சுரர் Thriyambagesurar

Image
விரித்ததோர் வேதம் ஆலின் கீழே புரம் எரித்ததோர் சுலாவின் மேலேச் சொற் கேட்பதோ ஒரிம்மையும் நெறிவிடா யடியார் நாவிலே திரிவதோர் விடை மேலே இவனை துதி! பெறுக நிதி!

கயிலாயநாதேச்சுரர் Kaylayanathesurar

Image
அவனியிலோர் அற்புத வடிவானை அரகர நவமணிச் சுடரானைப் பிச்சனை தேனைநாவை சிவயநம னானக் கயிலாய நாதனைப் பவயின்மை தருவானை தொழுது பரகதியடைவீர்!

திருசம்புகேச்சுரர் Thirusambugesurar

Image
தருவிலு மோர் சாரமானானை தாணுவை பரமனை கரும்பின் சுவைபோலானை பூச்சூழ்கேணி புவி தரும் பாரம் ஏற்பானை சம்புகேசனைச் சருவிய சாத்திரனை தொழ சித்தியடையலாம்!

வீழியழகேச்சுரர் Viziazagesurar

Image
அழியாததோர் அருளை உயிர்க்கு வரமாய் பொழிவானைச் சுழியானை சொற்ச்சுவை மாகேனை விழியழகானுக்கரியதோராழி யளித்தானை வழிப்பட்டு செல்வமும் வீடுபேறுமடைவீர்!

திருவட்டீச்சுரர் Thiruvatesurar

Image
பெருமானையோர் பிறப்பிறப்பிலா பரமனை உருவானைச் சுருதிகேள் உச்சனை பொடீவானை அருட் பார்வைபொழிவனெம்மானை அரியானை திருவட்டீச்சுரனை ஏத்திட வாழ்வீரினிதே!

மஞ்சுநாதேச்சுரர் Manjunathesurar

Image
கஞ்ச மலர்ப் பாத மானேந்திய கரனை ! செஞ்சடையானை சுதாகரனை மெச்சியத்தேனை மஞ்சு நாதனை மகேச்சுரனை மலையரசனை அஞ்செழுத்தானை தொழுதிட மறையும் அல்லலே !

காயாரோகணேச்சுரர் Kayaroganesurar

Image
மாயாயுலகோர் மாளுமுடலையேற்க காரணனை ஓயா பிறவி சுழலை யொழியச் செய் தாணேயானை காயா கனியாயடியாரோடிருப்பானை உருகி வாயார வாழ்த்திட வந்த காரியும் ஏகுவனே !

திருசங்கரலிங்கம் Thirusankaralingam

Image
குருந்தமாம் மரத்தானை கௌரி நாயகனை திருமகள் தங்கிய வனமாலி சீதரபாகனை கருங்கண்ட முடையானை சதாசிவ ரூபனை திருசங்கரலிங்கனை தொழ விதியை வெல்வீர்!

எமலிங்கேச்சுரர் Emalingesurar

Image
அமர்சூழோர் விடையில் வருவானை அரவானை சமர் செயசுரர் அழியச் செய்யுகேனை எமலிங்கரூபனை பலி கொளும் எம்பிரானை நமசிவயனை நினைந்திட எமபயமில்லையே!

திருபாதாளலிங்கம் Thirupathalalingam

Image
கலாவடிவம் உடையானை கருதுவார் கருதுஞ் சொலானை அங்கொரு தாயுமிலியானை அளவிட இலாதானை ஈசனாம் பாதிமதியானை பேச வலாருடை சங்கைகளெல்லாந் திண்ணமாய் தீருமே!

வாயுலிங்கேச்சுரர் Vayulingesurar

Image
காயுளொவ்வோர் சுவையான கனியுள் இரதமான தீயுளோர் சுடரான நினைச் சொல்லுகேனே தாயுளங் கருணையை போலினியாள்க தமியேனை வாயுலிங்கேச்சுரனே! வாழ்வாதாரமருளிடுக!