Posts

Showing posts with the label Lingam 1-20

வேதாரண்யேச்சுரர் Vedharanyesurar

Image
பாதாரமே ஓர் துணையென்றிருந்தேனரனே நீதான் வருஞ் சுமையை நீக்கச்செய்வையேயு னோதா உண்மையை உளுணர வைத்த ஒளியே நீயே ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக !

ஆதிகும்பேச்சுரர் Athikumbesurar

Image
வேதியனை யோர் விடையேறிய காரிய காரணனை மாதினை மெச்சுமோர் மணியைச் செல்வ பேறை ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை பாதிமதி சூடியவனை தொழ ஆவதெலாம் நலமே !

மாத்ருபூதேச்சுரர் Mathruboothesurar

Image
செகத்தி லோர் தாயுமாய்வந்தானை பரவிய யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேவை அகப்பூவினுறையு மருமருந்தை பணிய மகத்தில் புகுஞ் சனியும் மாறி நன்மை செயுமே !

முதுகுன்றீச்சுரர் Mudukundresurar

Image
முதுமையை சேர்பிணி யொடுவரும் இடரவை எதுவாயினுஞ் சுவறிட சிவச்சொ லொன்றீய மதுகொன்றை மத்தங் குறிஞ்சி கூவிளமும் புதுபொலி வோடணியு மீசனை முக்கண்ணணைதுதி !

தான்தோன்றீச்சுரர் Thanthondrisurar

Image
மன்றுள் ஓர் மாணிக்கமே! மண்ணே மாரனை வென்ற பூரண சுத்தசைவனேச் சொலொன்றீவதும் என்றோ யென்பால் தோன்றுமோ யிரக்கம் நன்றுஎன கருணையொடுன் தாளெனக் கருளுக!

ஓணகாந்தீச்சுரர் Onakanthesurar

Image
சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய் பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்!

மாசிலாமணீச்சுரர் Masilamanisurar

Image
பூசிநீறை பார்புகழ வெள்ளேறேறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச்சடை யணீசனே! மாசி மகத்தில் உலாவரும் மறையவனே ! வாசிதீர வளமுடன்வாழ மாகருணை புரிவீரே !

நீலகண்டேச்சுரர் Neelakandesurar

Image
ஆல முண்டார் யறிந்தருள் செய்வாரவர் கோலமொடுச் சுற்றிவர இச்சைகொண்டே ஞாலமுமண்டமிரவு பகல் செய்தாரவரைச் சீலமொடிருத்தி துதித்து நீர் வாழ்வீரினிதே!

கங்காதரேச்சுரர் Gangathesurar

Image
அங்கியை யோர் யங்கையிலடக்கி யரவொடு கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே சங்கையை தவிர்த்திட காரணமானவரவரே உங்கள் வல்வினை மாய்க்க வல்லவராவார்!

சுந்தரநடராசர் Sundaranatarajar

Image
திருமறை யோர் புகழ சடை வீசி பொற்சபையி லொரு கால் பராவி யாடும் நடராசனை நம் இருகரங் கூப்பித் தலையால் வணங்க வருந்துயரகன்று வாழ்வு சுபீட்சமடையும்!

காளஅத்தீச்சுரர் Kalathisurar

Image
அளவிலா யோர்பேரா னந்தங்கொண் டுரவொடு இளவேனில் சுகம்போன்றுச் சீவனை தீண்டி குளத்தில் மூழ்கி அவனருள் குழைந்து உளம் அவன்பாற் செலுங்கால டைவீர்சித்தி !

மல்லிகார்ச்சுனர் Malligarjunar

Image
அல்லி மலர் அகவிதழிலுறையு மானந்தனை சில்லில் சுழலாத பொற்ச்சோதி சீர் கல்லில் காணுமிறையை வலிவாதம் வாதிப்பானை சொல்லில் பொருளுமுடை பரமனை சென்று காணீர்!

சலகண்டேசுரர் Jalakandesurar

Image
கலந்த தோர் கருவில் உயிரும் பரந்து பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே உலகு கண்டு உருவங்கள் மாறி யழியாமல் நலந்தரும் நிமலாயுன் சபையின் கண்வைக!

இராமநாதேச்சுரர் Ramanathesurar

Image
சிலையில் கோர்த்த சரமேழு மராமரமுங் குலைந் துச்சுவற எய்தச்சீலத் தேவன் அலைநாதன் தொழுத மங்கை பாகனைநீர் மலைராசன் மகளோடு தொழுது இருவினை களைவீரே!

அருணாசலேச்சுரர் Arunachalesurar

Image
உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல் தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில் சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின் கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்!

ஏகாம்பரேச்சுரர் Ekambarasurar

Image
ஆற்றினை யோர்பாகம் வைத்து அங் காரஞ்சூடி நீற்றினை சுத்தமொடு நச்சி டுவரே கூற்றைப் பற்றுதைத்தம் மானிக் குகந்தவர் காற்றுமானவர் அவரை ஏத்த வினையறுமே!

தென்பெண்ணேச்சுரர் Thenpennesurar

Image
மன்றுள் ஓர் மாணிக்கமாய் உறை பரனே! நன்றுடையார் சுருதி மொழி மெச்சு மண்ணே ! கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே ! யென வென்று வினையை வளம்பல தெளிந்து வாழ்வீரே!

அயிராவதேச்சுரர் Iyeravathesurar

Image
மருந்துசேர் மருந்தினை மாலய னரனான பெருந்சோதி சுயம்புவை முச்சுடரை தேவனை அருவ வுருவனை புராந்தகனை தொழ இருமையிலு மினிமறுமையிலும் அவனருள் கூடுமே!

விசுவநாதேச்சுரர் Viswanthesurar

Image
சடையொடு யோர்பிறையும் புனலும் அரவும் இடையினில் சுழல் புலிகச்சுவுந் தேயும் உடைநாதனை உருகி வணங்கிட வினையகலி சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே!

புத்திரகாமேச்சுரர் Puthirakamesurar

Image
முத்தினையோர் மூலப் பொருளானானை பரமனை மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு சித்ர கானாம்ருத அரனை ! சதாசிவனை ! தொழ புத்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே!