செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam
செந்திலாதிபன் செண்பகமாலை விநாயகர் காப்பு வேண்டு வரமீயும் வேலவனின் புகழ் பாடும் நீண்டு நிகரிலா நிதியாஞ் செண்பக மாலையை யாண்டுமிரு வேளையும் இசையால் செப்பிட தூண்டுகை விநாயக! துணைபுரிக எந்தனுக்கு! தண்டையணி என்ற திருப்புகழ் பண்டை வினைகள் யாவும் பறந்தோட ஈராறு கண்களும் ஓராறு முகமுங் கரமதில் வேலுங் தண்டையணி பாதமுங் கொண்டு என்முன் தோன்றிடுக! அண்டர்புகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே ! 1 நிலையாப் பொருளை என்ற திருப்புகழ் நிலையாப் பொருளை உடலாக் கொண்டு நாளுமுழன்று தொலையாப் பிணியொடு துவண்டிடுமடியேன் வினையை குலைத்திடுக கூரான வேல் கொண்டு ! எழுகின்ற அலைசூழுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! ...